Tamil Short Story - ஆ நீயா ?

 

 

                                                                                நீயா ?

18 ஆம் நூற்றாண்டு . அது ஒரு வளர்ச்சி அடையாத கிராமம் . பலவித நம்பிக்கைகள் நிறைந்த காலம் . ஊருக்கு வெளியே தனியே ஒரு ஆல மரம் . ஊருக்கு உள்ளே பஞ்சாயத்து கூடி இருந்தது . பேச்சு மரத்தைப் பற்றித்தான் .

ஒருவர் தொடங்கினார் . மரத்தை வெட்டிடலாங்க . அந்த மரம் எப்ப நம்ம ஊருக்கு முன்னாடி முளைக்க ஆரம்பித்ததோ அப்ப இருந்தே நம்ம ஊருக்கு கெட்ட நேரம் தாங்க . குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லாம போறதும் பல வீடுகளுக்கு முன்னாடி இரவு சத்தம் கேட்பதும் வழக்கம் ஆகிடுச்சு .

 

தலைவர் சொன்னார் . மரத்தை வெட்டிடலாந்தான் . அதை வெட்ட யார் தயாரா இருக்கீங்க . கூட்டத்தில் ஒரு இளவட்டம் சொல்லிற்று . அய்யா நான் வெட்டறேங்க . ஆனா நான் ஒருத்தனா வெட்ட முடியாதுங்க . இன்னும் நாலு பேரு வேணுங்க .

 

இவர் கூட யாரெல்லாம் போறீங்க ? ஒருவரும் முன் வரவில்லை . இளவட்டம் கூறிற்று . பேயைக் கண்டு பயந்துட்டு தானே யாரும் வர மாட்டேன்றீங்க . நான் ஒருத்தனா  போய்  இன்னிக்கு ராத்திரி பூரா மரத்துக்கு அடியில் படுத்துட்டு காலைல எந்திருச்சு வரேன் . அப்புறம் என் கூட மரத்தை வெட்ட எல்லாரும் ஒண்ணா வாங்க . கூட்டத்தில் சலசலப்பு . இறுதியாக அவன் தங்க பஞ்சாயத்து சம்மதித்தது . இரவு பல எதிர்ப்புகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் இடையே கிளம்பினான் இளவட்டம் கதிர் . மறுநாள் காலை சூரியன் உதயமானதும் ஒரு கூட்டமே மரத்திற்கு ஓடியது . கயத்துக்கட்டிலில் கதிர் மல்லாக்க கிடந்தான் . வாயில் இரத்தம் . நான் அப்பவே சொன்னேனப்பா என்று பல குரல்கள் .

அன்று மீண்டும் பஞ்சாயத்து கூடியது . பக்கத்துக்கு ஊரில் இருந்து புதிதாக சிலர் . ஒருவர் சொன்னார் . அய்யா இவங்க பேயைப் பாத்திருக்காங்க . நீங்க எப்ப பாத்தீங்கன்னு சொல்லுங்க என்றார் தலைவர் .

அய்யா போன வாரம் இரவு நாங்கள் இந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தோம் . ஆலமரத்தைத் தாண்டி வரும் போது வெள்ளையாக ஒரு உருவம் எங்களைத் துரத்தியது . நாங்கள் தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது .

அதோடு மரத்தை வெட்டும் திட்டம் கைவிடப்பட்டது .

அன்று இரவு இரு உருவங்கள் மரத்திற்கு அடியில் தோண்டிக் கொண்டிருந்தன . ஒருவர் தலைவர் . மற்றொருவர் துணைத் தலைவர் .

அய்யா நம்ம தங்கத்தை எல்லாம் வீட்டிலேயே புதைக்கலாமே . இங்க ஏன் புதைக்கணும் ?

வீட்டுல வச்சா தங்கம் பத்திரமாக இருக்காது . பிரிட்டிஷ் அரசாங்கம் நம்ம கிட்ட இருந்து பறிமுதல் பண்ண வாய்ப்பு இருக்கு . இந்த மரத்துக்கு அடியில் புதைச்சாலும் யாரு வேணாலும் பாக்க வாய்ப்பு இருக்கு . அதனாலதான் பேய் இருக்குனு ஒரு வதந்தியை பக்கத்து ஊரு ஆட்கள் மூலமா கிளப்பி விட்டேன் . பாதி குழியைத் தோண்டி இருந்தார்கள் . அப்ப நம்ம கதிர் எப்படிங்க ரத்தம் கக்கி செத்தான் ?

அதுதான் எனக்கும் புரியலை . ஒருவேளை பயத்தில் செத்து  இருப்பான் .

 

மணி பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருந்தது . லேசாக ஒரு சத்தம் கேக்க ஆரம்பித்தது . சுத்தி சுத்திப் பார்த்தார்கள் . எதுவும் தட்டுப்படவில்லை . அய்யா மரத்துக்கு பின்னாடி யாரோ ஒளிஞ்சிருந்து நம்மைப் பாக்கறாங்கனு நினைக்கிறேன் . சரி போய்  பாத்துட்டு வா . போனவர் திரும்பவில்லை . அவரைப் பார்க்க ஒரு எட்டு எடுத்து வைத்தார் . பின்புறம் ஏதோ சத்தம் .

நீயா ?

மறுநாள் காலையில் ஊரே மரத்தின் அடியில் . மரத்திற்குப் பின் துணைத் தலைவர். வாயில் ரத்தம் .

தோண்டிய குழியில் தலைவர் வாயில் ரத்தம் .

Comments

Popular posts from this blog

Market report 2/3/2023